இந்திய அணியுடன் தோல்வி... அதிரடியாக ஓய்வை அறிவித்த ஆஸ்திரேலிய கேப்டன்
சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி சுற்றில் ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியிடம் தோல்வியைத் தழுவி தொடரை விட்டு வெளியேறி இருக்கிறது.

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி சுற்றில் ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியிடம் தோல்வியைத் தழுவி தொடரை விட்டு வெளியேறி இருக்கிறது.
இதன் மூலம் ஆஸ்திரேலிய அணியில் தற்காலிக கேப்டனாக செயல்பட்ட ஸ்மித், சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறார்.
35 வயதான ஸ்மித் ஆஸ்திரேலிய அணிக்காக 170 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 5800 ரன்கள் குவித்து உள்ளதுடன், இதில் 12 சதம் 35 அரை சதம் அடங்கும்.
பந்துவீச்சில் 28 விக்கெட் வீழ்த்தியுள்ளதுடன், ஒரு நாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணிக்காக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் 12ஆவது இடத்தில் உள்ளார்.
இதேபோன்று ஆஸ்திரேலியா அணி 2015 உலக கோப்பையை வெல்ல ஸ்மித் முக்கிய காரணமாக இருந்தார். அந்த தொடரில் மொத்தம் அவர் ஐந்து முறை 50 ரன்கள் அடித்தார்.
இறுதியில் இந்தியாவுக்கு எதிராக சதமும், இறுதிப்போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக அரை சதமும் அடித்து இருந்தார். 2015 ஆம் ஆண்டுக்கான ஐசிசி ஒரு நாள் போட்டிகளுக்கான விருதும் ஸ்மித்துக்கு கிடைத்தது.
ஆஸ்திரேலிய அணியை 64 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் தலைமை தாங்கி ஸ்மித் வழிநடத்திருக்கிறார்.
தனது ஓய்வு முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்மித், இந்த பயணம் மிகவும் சிறப்பாக இருந்தது. ஒவ்வொரு நிமிடத்தையும் நான் விரும்பினேன். பல மறக்க முடியாத நினைவுகளும் எனக்கு கொடுத்தது. ஆஸ்திரேலிய அணிக்காக இரண்டு உலக கோப்பைகளை வென்றதை என்னால் மறக்க முடியாது. தற்போது 2027 உலக கோப்பைக்கு ஆஸ்திரேலியா அணி தயாராக வேண்டும் என்பதற்காக தான் இந்த முடிவை எடுத்திருக்கிறேன்.
மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவேன் என்று கூறியுள்ள ஸ்மித், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
தற்போது ஸ்மித்துக்கு 35 வயது ஆகிறது. அவர் ஆசஸ் மற்றும் 2027 ஆம் ஆண்டு வரை டெஸ்ட் கிரிக்கெட் விளையாட உள்ளதுடன், 2028 ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்காக இடம்பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே வார்னர் ஓய்வு பெற்ற நிலையில் தற்போது ஸ்மித்தும் விலகி இருப்பது ஆஸ்திரேலிய அணி அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து செல்வதாக கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.