கோல்டன் விசா திட்டத்தை நிறுத்திய ஆஸ்திரேலியா... வெளியான அதிரடி முடிவு..!
அதற்குப் பதிலாக தொழிலாளர்களுக்கு அதிக அளவில் விசா வழங்க கவனம் செலுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியா அரசு கடந்த 2012ம் ஆண்டு கோல்டன் விசா (Golden Visa) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதிக சொத்து மதிப்புமிக்க வெளிநாட்டு தொழில் அதிபர்கள் நிரந்தரமாக ஆஸ்திரேலிய குடியுரிமை வழங்குவதற்கு வழிவகுப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
இதன் மூலம் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் ஆஸ்திரேலியாவில் முதலீடு செய்ய வாய்ப்பு ஏற்படும் என ஆஸ்திரேலிய அரசு நினைத்தது. ஆனால், இந்த கோல்டன் விசா திட்டம் ஆஸ்திரேலியா நாட்டிற்கும், நாட்டின் பொருளாதாரத்திற்கும் உதவவில்லை.
இதனால் இத்திட்டத்தை ரத்து செய்ய ஆஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளது. அதற்குப் பதிலாக தொழிலாளர்களுக்கு அதிக அளவில் விசா வழங்க கவனம் செலுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது.
அனுமதிக்கப்பட்ட முதலீடுகளில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் குறைந்த பட்சம் 5 மில்லியன் அமெரிக்க டாலர் அளவில் முதலீடு செய்தால், ஆஸ்திரேலியாவில் ஐந்து ஆண்டுகள் வரை தங்க முடியும் என தெரிவிக்கபடுகின்றது