இணைய விளம்பரத்தால் நேர்ந்த கதி.. பட்டப்பகலில் மூவரிடம் கொள்ளை

இணையத்தில் வெளியான விளம்பரத்துக்கு அமைய மோட்டார் சைக்கிள் வாங்குவதற்காக வந்த மூவரிடம் கொள்ளையிடப்பட்டுள்ளது.

ஜனவரி 26, 2024 - 16:08
இணைய விளம்பரத்தால் நேர்ந்த கதி.. பட்டப்பகலில் மூவரிடம் கொள்ளை

பமுனுகம தெலத்துர எலபெம்ம பகுதியில் கூரிய ஆயுதங்களால் மூவர் தாக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் பணம் மற்றும் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

இணையத்தில் வெளியான விளம்பரத்துக்கு அமைய மோட்டார் சைக்கிள் வாங்குவதற்காக லொறியில் வந்த மூவரே இவ்வாறு தாக்கப்பட்டதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீதியில் மறைந்திருந்த நால்வர் இந்த தாக்குதலை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், 132,000 ரூபாய் பணம், 5 அலைலைபேசிகள், தங்க நகை மற்றும் வளையல் என்பவற்றை திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்தவர்கள் ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், கொள்ளைச் சம்பவத்தை மேற்கொண்ட சந்தேக நபர்கள் பமுனுகம பொலிஸாரினால் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!