காங்கோவில் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு தீப்பிடித்ததில் 50 பேர் பலி
காங்கோ குடியரசில் ஆற்றில் பயணித்த பயணிகள் படகில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 பேர் உயிரிழந்தனர்.

காங்கோ குடியரசில் ஆற்றில் பயணித்த பயணிகள் படகில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 பேர் உயிரிழந்தனர்.
தீ பரவியதைத் தொடர்ந்து உள்ளே இருந்தவர்கள் ஆற்றில் குதித்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தின் போது சுமார் 400 பயணிகள் இருந்ததாகவும், அவர்களில் பெரும்பாலோர் மீட்கப்பட்ட போதிலும், சுமார் 100 பேர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன.
குறித்த படகில் உணவு தயாரித்துக் கொண்டிருந்த போது தீ பரவியதாக தெரிவிக்கப்படுகிறது.