திபெத் நிலநடுக்கம் - 126 பேர் உயிரிழப்பு, 180 பேர் காயம்
இடிபாடுகளில் சிக்கியிருந்த சுமார் 400 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 1,500 பேர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திபெத்தின் ஷிகாட்சே நகரை உலுக்கிய நிலநடுக்கத்தில் உயிரிழ்ந்தவர்களின் எண்ணிக்கை 126ஆக உயர்வடைந்துள்ளதுடன், 180 பேர் காயமடைந்துள்ளனர்.
அத்துடன், இடிபாடுகளில் சிக்கியிருந்த சுமார் 400 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 1,500 பேர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சுமார் 30,000 பேரை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்தனர்.
சீனாவின் திபெத் பகுதியை 6.8 ரிக்டர் அளவிலான மிக வலிமையான நிலநடுக்கம் நேற்று உலுக்கியதுடன், நேப்பாளம், பூட்டான், இந்தியா ஆகியவற்றில் நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன.