அஸ்வின் பாதியிலேயே விலகியமைக்கு இதுதான் காரணம்.. வெளியான தகவல்!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில், முதலில் களமிறங்கிய இந்திய அணி 445/10 ரன்களை குவித்தது.

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில், முதலில் களமிறங்கிய இந்திய அணி 445/10 ரன்களை குவித்தது.
அடுத்து, முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியில், ஓபனர் ஜாக் க்ராலி 15 (28) விக்கெட்டை ரவிச்சந்திரன் அஸ்வின் எடுத்துக் கொடுத்தார்.
ஒரு விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம், ரவிச்சந்திரன் அஸ்வின் 500 விக்கெட்களை கைப்பற்றி வரலாறு படைத்தார்.
87 இன்னிங்ஸ்களில் முரளிதரன் இதனை செய்த நிலையில், அஸ்வின், 98 இன்னிங்ஸ்களில் 500 விக்கெட்களை சாய்த்தார். கும்ளே 105 டெஸ்ட்களில் 500 விக்கெட்களை எடுத்து, மூன்றாவது இடத்தில் உள்ளார்.
3ஆவது நாளில் விலகிய அஸ்வின்... 4ஆவது நாளில் விளையாட முடியுமா? விதிமுறை என்ன?
இங்கிலாந்து அணி தற்போது 207/2 ரன்களை அடித்து, 238 ரன்கள் பின்தங்கியுள்ளது. இன்றைய தினத்தில் பும்ரா, அஸ்வின் ஆகியோர் கடும் முயற்சியை மேற்கொண்டால்தான், இந்தியாவுக்கு பின்னடைவு ஏற்படாது எனக் கருதப்பட்டது.
இன்றைய மூன்றாவது நாள் ஆட்டம் இருக்கும் நிலையில், ரவிச்சந்திரன் அஸ்வின் திடீரென்று வீடு திரும்பியுள்ளார். அவரது தாயார் உடல்நல குறைவு காரணமாக அவதிப்படுவதால்தான், அஸ்வின் அவசரமாக வீடு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், மூன்றாவது டெஸ்டில் இருந்து விலகிவிட்டார். மற்ற இரண்டு டெஸ்ட்களில் பங்கேற்க வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.