'ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க இன்று பதவியேற்கலாம்'
உத்தியோகபூர்வ முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் அநுரகுமார திஸாநாயக்க பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என அவர் மேலும் தெரிவித்தார்.

2024 இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்க அதிக வாக்குகளைப் பெற்றுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் மூத்த தலைவர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
“இலங்கையின் அடுத்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க என்பது மிகவும் தெளிவாக உள்ளது. எங்கள் வாக்குச்சாவடி முகவர்களிடம் இருந்து வரும் அறிக்கையின்படி நாங்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளோம்'' என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாவது விருப்பு வாக்கு எண்ணிக்கையின்றி வெற்றி பெறுவதற்குத் தேவையான 50 சதவீத வாக்குகளை அநுரகுமார திஸாநாயக்க பெற்றுக் கொண்டாரா என ஊடகவியலாளர்கள் வினவியபோது, “எங்களிடம் உள்ள வாக்கு வித்தியாசத்தில் அவர் 50 சதவீதத்தை அடைகிறாரா, இல்லையா என்பது முக்கியமில்லை. இரண்டாவது வேட்பாளர் நெருங்க முடியாத இடத்தை அவர் பிடிப்பார் என்பது தெளிவாகிறது.
உத்தியோகபூர்வ முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் அநுரகுமார திஸாநாயக்க பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என அவர் மேலும் தெரிவித்தார்.
"இறுதி முடிவுகள் எப்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்பதைப் பொறுத்து அது இன்று ஞாயிற்றுக்கிழமை மாலையாக இருக்கலாம்" தேசிய மக்கள் சக்தியின் மூத்த தலைவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.