விடுமுறை குறித்து வெளியான மற்றும் ஒரு அறிவிப்பு
வரும் வெள்ளிக்கிழமை சிறப்பு வங்கி விடுமுறையாக அரசாங்கம் கடந்த வாரம் அறிவித்திருந்தது

ஜூன் 30ஆம் திகதி விசேட வங்கி விடுமுறையாக அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், அன்றைய தினம் கொழும்பு பங்குச் சந்தைக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் வெள்ளிக்கிழமை சிறப்பு வங்கி விடுமுறையாக அரசாங்கம் கடந்த வாரம் அறிவித்திருந்தது.
இது தொடர்பில் நேற்று விசேட அறிக்கையொன்றை விடுத்த மத்திய வங்கியின் ஆளுநர், உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பை நிறைவு செய்வதற்கு தேவையான கால அவகாசத்தைப் பெற்றுக்கொள்வதற்காக ஜூன் 30 ஆம் திகதி வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதன்படி, அரசாங்கம் மற்றும் நிதியமைச்சு இணைந்து இம்மாதம் 30ஆம் திகதியை வங்கி விடுமுறையாக அறிவித்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.