மீண்டும் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்; கனமழைக்கு வாய்ப்பு

ஜூன் 10 ஆம் திகதி முதல் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜுன் 7, 2025 - 10:36
மீண்டும் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்; கனமழைக்கு வாய்ப்பு

ஜூன் 10 ஆம் திகதி முதல் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் மற்றும் நாட்டைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் அவ்வப்போது பலத்த காற்று வீசக்கூடும்.

எதிர்காலத்தில் வெளியிடப்படும் அறிவிப்புகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று பல தடவைகள் மழை பெய்யும்.

வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு  30 மற்றும் 40  கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். 

இடியுடன் கூடிய மழையுடன் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயங்களைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!