எரிவாயு விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு
மாதாந்த எரிவாயு விலை திருத்தத்தின் படி, செப்டம்பர் மாதத்தில் லிட்ரோ எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

மாதாந்த எரிவாயு விலை திருத்தத்தின் படி, செப்டம்பர் மாதத்தில் லிட்ரோ எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இதனைக் கூறியுள்ளார். கடைசியாக ஜூலை 2ம் திகதி எரிவாயு விலை திருத்தம் செய்யப்பட்டது.
இதன்படி, 12.5 கிலோகிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 3,690 ரூபாயாகும்.
5 கிலோகிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 1,482 ரூபாயாகவும், 2.3 கிலோகிராம் கொண்ட வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 694 ரூபாவாகும்.