பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு!

எதிர்வரும் ஜனவரி மாதம் அமுலுக்கு வரவுள்ள வற் வரி அதிகரிப்பு காரணமாக பஸ் கட்டணங்கள் திருத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டிசம்பர் 14, 2023 - 18:19
பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு!

எதிர்வரும் ஜனவரி மாதம் அமுலுக்கு வரவுள்ள வற் வரி அதிகரிப்பு காரணமாக பஸ் கட்டணங்கள் திருத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை, தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இன்று (14) தெரிவித்துள்ளார்.

வற் வரி அதிகரிக்கப்பட்ட பின்னர், பஸ் ஒன்றை கொள்வனவு செய்வதற்கு சராசரியாக ஒரு கோடியே ஐம்பத்தேழு இலட்சம் ரூபாய் தேவைப்படும் என, எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதையும் படிங்க: நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு

இவ்வாறான விலையில் பஸ்களை கொள்வனவு செய்து குறைந்த கட்டணத்தில் பயணிகளை ஏற்றிச்செல்வது சாத்தியமற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நாட்டில் பஸ் உதிரிபாகங்கள், எரிபொருள், சேவைக் கட்டணங்கள் என அனைத்தும்  அதிகரித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!