கனடா புதிய வெளியுறவுத் துறை அமைச்சராக அனிதா ஆனந்த் நியமனம்!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த், கனடாவின் புதிய வெளியுறவு அமைச்சராக பிரதமர் மார்க் கார்னியால் நியமிக்கப்பட்டுள்ளார்.

மே 15, 2025 - 10:09
கனடா புதிய வெளியுறவுத் துறை அமைச்சராக அனிதா ஆனந்த் நியமனம்!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த், கனடாவின் புதிய வெளியுறவு அமைச்சராக பிரதமர் மார்க் கார்னியால் நியமிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சரவை மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, மெலனி ஜோலிக்குப் பதிலாக அனிதா ஆனந்த் வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டதுடன், முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அமைச்சரவையைப் போலவே, மார்க் கார்னி அமைச்சரவையில் பாதி பேர் பெண்கள் ஆவர்.

ஏப்ரல் 28 அன்று நடைபெற்ற பொதுத்தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 22 வேட்பாளர்கள் வெற்றி பெற்றதுடன், இவர்களில் நான்கு பேர் மார்க் கார்னியின் அமைச்சரவை உறுப்பினர்கள்.

அனிதா ஆனந்த் கனடாவில் அமைச்சரவை அமைச்சரான முதல் இந்து ஆவார். கனடாவின் பிறந்து வளர்ந்த அனிதா ஆனந்த் (58 வயது), 2019 இல் அரசியலில் நுழைந்தார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!