மீண்டும் மின்சாரம் வழமைக்கு திரும்புவது தொடர்பில் வெளிவந்த அறிவித்தல்

பல மின்மாற்றிகள் மற்றும் மின் நிலையங்களில் ஏற்பட்ட மின்னல் தாக்கமே  நாடளாவிய ரீதியில் மின் தடை ஏற்பட காரணம் என்று கூறப்படுகிறது.

டிசம்பர் 10, 2023 - 01:40
டிசம்பர் 10, 2023 - 12:00
மீண்டும் மின்சாரம் வழமைக்கு திரும்புவது தொடர்பில் வெளிவந்த அறிவித்தல்

தடைப்பட்டுள்ள மின்விநியோகத்தை வழமைக்கு கொண்டுவர இன்னும் 2 மணித்தியாலங்கள் செல்லலாம் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

கொத்மலையில் இருந்து பியகம வரையான மின் விநியோக பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாடு முழுவதும் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக அந்த சபை சொல்லி உள்ளது.

பல மின்மாற்றிகள் மற்றும் மின் நிலையங்களில் ஏற்பட்ட மின்னல் தாக்கமே  நாடளாவிய ரீதியில் மின் தடை ஏற்பட காரணம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், நாடு முழுதும் ஏற்பட்ட  மின்வெட்டு காரணமாக இணைய இணைப்பில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் மா  அதிபர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!