11 வயது சிறுவனை இழுத்துச் சென்ற முதலை
நீராடச் சென்ற சிறுவன், முதலை பிடித்து இழுத்துச் சென்று காணாமல் போயுள்ளதாக கடுவெல பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

நீராடச் சென்ற சிறுவன், முதலை பிடித்து இழுத்துச் சென்று காணாமல் போயுள்ளதாக கடுவெல பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
நேற்று (16) மாலை கடுவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதின அந்தோனி மாவத்தையில் உள்ள களனி ஆற்று பகுதியில் நீராடச் சென்ற சிறுவனே காணாமல் போயுள்ளான்.
காணாமல் போன சிறுவனை தேடும் பணியில் பொலிஸார், பிரதேசவாசிகள் மற்றும் கடற்படை பிரிவு நீர்மூழ்கி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.