ஆயிரத்துக்கும் அதிகமான கைதிகளுக்கு பொது மன்னிப்பு
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள 1004 கைதிகளுக்கு ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள 1004 கைதிகளுக்கு ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
989 ஆண் மற்றும் 15 பெண் கைதிகள் இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணியாளர், ஊடகப் பேச்சாளர் காமினி பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பல்லேகல சிறைச்சாலையில் இருந்து 162 பேரும், மஹர சிறைச்சாலையில் இருந்து 78 பேரும், அநுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து 48 பேரும், மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து 47 பெரும், வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து 42 கைதிகளும் விடுவிக்கப்படவுள்ளனர்.