அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் மனைவி ஜில் பிடனுக்கு கொரோனா தொற்று!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் மனைவி ஜில் பிடனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

செப்டெம்பர் 5, 2023 - 14:23
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் மனைவி ஜில் பிடனுக்கு கொரோனா தொற்று!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் மனைவி ஜில் பிடனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

மனைவிக்கு கொரோனா ஏற்பட்ட நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோபிடனுக்கு தொற்று இல்லை என பரிசோதனையில் தகவல் தெரியவந்துள்ளது.

அவரது மனைவி ஜில் பிடனுக்கு கொவிட் தொற்று இருந்தபோதிலும், ஜி-20 மாநாட்டின் அட்டவணையின்படி ஜனாதிபதி ஜோ பிடன் இந்தியா வருவார். திட்டமிட்டபடி மாநாட்டில் கலந்து கொள்வார் என வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிடன் செப்டம்பர் 7ஆம் திகதி இந்தியா செல்கிறார். செப்டம்பர் 8 ஆம் திகதி புதுடெல்லியில் நடைபெறும் ஜி 20 உச்சி மாநாட்டையொட்டி அவர் பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு சந்திப்பையும் நடத்துகிறார். 

செப்டம்பர் 9ம் திகதி ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்ளும் ஜோ பிடன் தூய்மையான எரிசக்தி மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது உள்ளிட்ட உலகளாவிய பிரச்சினைகள் குறித்து  கலந்துரையாடுவார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!