நாடளாவிய ரீதியில் சாதாரணத் தர பரீட்சை இன்று ஆரம்பம்
அனைத்து பரீட்சார்த்திகளும் பரீட்சை ஆரம்பிப்பதற்கு அரை மணித்தியாலத்திற்கு முன்னதாக பரீட்சை நிலையங்களுக்கு வருமாறு பரீட்சை ஆணையாளர் அறிவுறுத்தி உள்ளார்.

2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை நடாத்துவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் 3,663 பரீட்சை நிலையங்களில் இன்று (17) ஆரம்பமாகவுள்ள இப்பரீட்சைக்கு 474,147 மாணவர்கள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டார்.
அனைத்து பரீட்சார்த்திகளும் பரீட்சை ஆரம்பிப்பதற்கு அரை மணித்தியாலத்திற்கு முன்னதாக பரீட்சை நிலையங்களுக்கு வருமாறு பரீட்சை ஆணையாளர் அறிவுறுத்தி உள்ளார்.
இதேவேளை, பரீட்சை முறைகேடுகளை குறைப்பதற்கு விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.