கிழக்கு மாகாணத்தில் அனைத்து வைத்தியர்களும் பணிநிறுத்தத்தில்
அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் உள்ள அனைத்து வைத்தியர்களும் இந்தப் பணிநிறுத்தத்தில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கிழக்கு மாகாணத்தின் அனைத்து வைத்தியசாலைகளிலும் இன்று செவ்வாய்க்கிழமை (13) அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் பணிநிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். நிர்வாக மற்றும் நிதி முறைகேடுகளுக்கான புகாரைத் தொடர்ந்து, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரை பதவியிலிருந்து நீக்கி, அந்தப் பதவிக்கு புதிய பணிப்பாளரை நியமிக்க கோரி, இந்தப் பணிநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, கிழக்கு மாகாணத்தில் உள்ள 2 பொது வைத்தியசாலைகள், ஒரு போதனா வைத்தியசாலை, 17 ஆதார வைத்தியசாலைகள், 52 பிரதேச வைத்தியசாலைகள் மற்றும் 113 ஆரம்ப சுகாதார மையங்களில் பணிநிறுத்தம் நடைமுறையில் உள்ளது.
மேலும், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் உள்ள அனைத்து வைத்தியர்களும் இந்தப் பணிநிறுத்தத்தில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

