14 வயது சிறுமி உயிரிழப்பு - TikTok செயலிக்கு தடை விதிப்பு
இதனையடுத்து, TikTok இளைஞர்கள் மீது ஏற்படுத்தும் தாக்கம் குறித்து பல்வேறு தரப்பினர் சாடியுள்ளனர்.

அல்பேனியாவில் TikTok சமூக ஊடகம் ஒரு வருடத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. 14 வயதுப் பெண் உயிரிழந்தைதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் அந்தப் பெண்ணுக்கும் மற்ற பயனீட்டாளர்களுக்கும் இடையே தளத்தில் வாக்குவாதம் ஏற்பட்டதுடன், அவர்கள் பின்னர் நேரில் சந்தித்தும் சண்டையிட்டுள்ளனர்.
அதில் 14 வயதுப் பெண் உயிரிழந்ததுடன், இன்னொருவர் காயமடைந்துள்ளார்.
இதனையடுத்து, TikTok இளைஞர்கள் மீது ஏற்படுத்தும் தாக்கம் குறித்து பல்வேறு தரப்பினர் சாடியுள்ளனர்.
இந்த நிலையில், "சீனாவில் தளத்தில் மாணவர்களுக்குப் பயனளிக்கக்கூடிய காணொளிகள் உண்டு. ஆனால், மற்ற நாடுகளில் மோசமான காணொளிகள் உள்ளதாகவும், அதற்கு சமூகமே காரணம்." என்று அல்பேனிய பிரதமர் எடி ராமா கூறியுள்ளார்.
அத்துடன், மாணவர்களின் கல்விக்கு உதவக்கூடிய திட்டங்கள் விரைவில் அங்கு அறிமுகம் செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.