பாடசாலை தொடர்பில் வெளியான அதிரடி தகவல்
கொழும்பு வலயத்திலும் மேல் மாகாணத்தின் புறநகர்ப் பகுதிகளிலும் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் மற்றைய மாகாணங்களின் முக்கிய நகரங்களை அண்மித்ததாக அமைந்துள்ள பாடசாலைகளும் ஜூலை 10 வரை மூடப்படும்.

கொழும்பு வலயத்திலும் மேல் மாகாணத்தின் புறநகர்ப் பகுதிகளிலும் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் மற்றைய மாகாணங்களின் முக்கிய நகரங்களை அண்மித்ததாக அமைந்துள்ள பாடசாலைகளும் ஜூலை 10 வரை மூடப்படும்.
ஏனைய, பாடசாலைகள் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கான அதிகாரம் பாடசாலைகளின் அதிபர்களுக்கும், மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 10 ஆம் திகதியின் பின்னர் முறையாக எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகிக்கப்பதற்கான முறையான திட்டமொன்றை வகுத்து செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் என்ற வகையில் இந்த நெருக்கடி நிலைமை தொடர்பில் மிகவும் வருந்துவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தற்போதைய எரிபொருள் கையிருப்பை கருத்திற்கொண்டு, எதிர்வரும் காலங்களில் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்தையும் மட்டுப்படுத்த வேண்டிய நிலைமையும் ஏற்படக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.
எமது வாட்ஸ்அப் குழுவில் இணைய:- https://chat.whatsapp.com/IsDYcKcaILjH8XEe5hZiCl