ரயிலின் மேற்கூரையில் பயணித்த இளைஞன் பலி
ரயிலின் மேற்கூரையில் பயணித்த இளைஞர் ஒருவர் ஹொரேபே நிலையத்திற்கு அருகில் விபத்துக்குள்ளாகியுள்ளார்.

ரயிலின் மேற்கூரையில் பயணித்த இளைஞர் ஒருவர் ஹொரேபே நிலையத்திற்கு அருகில் விபத்துக்குள்ளாகியுள்ளார்.
கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலின் கூரையில் ஏறிய குறித்த இளைஞன் ஹொரேபே ரயில் நிலையத்தின் கூரையில் மோதியதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் படுகாயமடைந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும், அவர் சுமார் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
ரயில் சாரதிகள் சங்கம் ஒன்று நேற்று (11) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதால் பல ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
இதன்காரணமாக, சேவையில் ஈடுபட்டுள்ள ரயில்களில் பயணிகள் அதிகளவில் பயணிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.