வாரந்தோறும் பச்சை குத்தும் பெண்; உடல் முழுவதும் 800 பச்சைகள்!

"எனக்கு 70 வயதானாலும் நான் பச்சை குத்திக்கொண்டு தான் இருப்பேன். எனது முகம் முழுவதும் நீலமாக மாறினாலும் நான் பச்சை குத்துவதை நிறுத்தமாட்டேன்" என்கிறார் சுலோன்.

ஜுலை 7, 2023 - 20:47
ஜுலை 7, 2023 - 20:49
வாரந்தோறும் பச்சை குத்தும் பெண்; உடல் முழுவதும் 800 பச்சைகள்!

இங்கிலாந்தைச் சேர்ந்த 46 வயது மெலிசா சுலோனுக்கு (Melissa Sloan) வாரந்தோறும் 2, 3 புதிய பச்சைகளை குத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார். 

இதனால் தற்போது அவரது உடல் முழுவதும் 800 பச்சைகள் உள்ளன.

குறிப்பாக முகத்தில் பச்சை குத்துவது என்றால் அவருக்கு மிகவும் பிடிக்கும்.

20 வயதில் முதலில் பச்சை குத்திக்கொண்ட சுலோன், விரைவில் அதைத் தனது பழக்கமாக்கியுள்ளார்.

அதனால் அவருக்கு வேலை கிடைப்பது கடினம் என்று The New York Post செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன் அவர் கழிப்பிடங்களைக் கழுவும் வேலையைச் செய்துகொண்டிருந்தார்.

பின்னர் அவர் கழிப்பிடங்களைக் கழுவும் மற்றொரு வேலைக்கு விண்ணப்பித்தும் அது கிடைக்கவில்லை என்று Daily Star செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாளையே இன்னொரு வேலை கிடைத்தால் அதைச் செய்வதற்குத் தயார் என்று கூறுகிறார் சுலோன்.

வேலை கிடைக்கச் சிரமப்பட்டாலும் வாரந்தோறும் 2 அல்லது 3 புதிய பச்சைகளைக் குத்திக்கொள்கிறார்.

மேலும், "எனக்கு 70 வயதானாலும் நான் பச்சை குத்திக்கொண்டு தான் இருப்பேன். எனது முகம் முழுவதும் நீலமாக மாறினாலும் நான் பச்சை குத்துவதை நிறுத்தமாட்டேன்" என்கிறார் சுலோன்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!