அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் பற்றி சாகரவின் தகவல்
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவே பாராளுமன்றத்தில் அதிக பெரும்பான்மையை கைப்பற்றும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஜனாதிபதியை நியமிப்பதுடன், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவே பாராளுமன்றத்தில் அதிக பெரும்பான்மையை கைப்பற்றும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இந்த நாட்டின் அதிகாரம் விரைவில் கைப்பற்றப்படும் எனவும், மஹிந்த ராஜபக்ஷவுக்குஅதிகாரத்தை வழங்க மக்கள் தயாராக உள்ளதாகவும் காரியவசம் கூறியுள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொலன்னறுவை மாவட்டத் தொகுதிக் குழுக் கூட்டம் கடந்த 8ஆம் திகதி மன்னம்பிட்டிய மகாவலி பிரதிபா மண்டபத்தில் நடைபெற்ற போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன என்ற ரீதியில் மக்கள் பலம் கொடுக்கும் வரை, ஸ்ரீ லங்கா பொதுஜன இந்த நாட்டின் அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்து இலங்கையின் பாராளுமன்றத்தில் அதிகாரத்தை பிடிப்போம் என அவர் கூறியுள்ளார்.