மூன்றாண்டு நிறைவில் தமிழ் ஊடக வரலாற்றில் தனித்தடம் பதித்த தமிழன்
கொரோனா உச்சம் கொண்ட காலத்தில் சவால்களுக்கு மத்தியில் ஆரம்பிக்கப்பட்ட தமிழன் பத்திரிகை வெற்றிக்கரமான மூன்று ஆண்டுகளை நிறைவு செய்து தமிழ் ஊடக வரலாற்றில் தனக்கான இடத்தை தக்கவைத்து கொண்டுள்ளது.

கொரோனா உச்சம் கொண்ட காலத்தில் சவால்களுக்கு மத்தியில் ஆரம்பிக்கப்பட்ட தமிழன் பத்திரிகை வெற்றிக்கரமான மூன்று ஆண்டுகளை நிறைவு செய்து தமிழ் ஊடக வரலாற்றில் தனக்கான இடத்தை தக்கவைத்து கொண்டுள்ளது.
தமிழன் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டாலும் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களின் குரலாக முழங்குவதில் தமிழன் பத்திரிக்கைக்கு நிகர் தமிழனே!.
தமிழன் பத்திரிகையின் மூன்று ஆண்டுகள் நிறைவினையொட்டி கொழும்பு 04-இல் உள்ள பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நேற்று (23) மாலை விசேட நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்த நிகழ்வில் அரசியல்வாதிகள், வாசகர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றிருந்தனர்.
தமிழ் பத்திரிகைகள் பல்வேறு காரணங்களால் மூடப்பட்டுக் கொண்டிருக்கும் காலக்கட்டத்தில் அதுவும் கொரோனா காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு குறுகிய காலத்தில் மக்களின் நம்பிக்கையை வென்ற தமிழன் பத்திரிகையின் ஆசிரியர் பீட குழாத்தினருக்கு நியூஸ் 21 ஆசிரியர் பீடம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றது.