விமானப் பணிப்பெண்ணிடம் சில்மிஷம் - ஸ்வீடன் பிரஜைக்கு அபராதம்
விமான நிலைய பொலிஸார், குறித்த நபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

விமானம் பறக்கும் போது விமானப் பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட, சுவீடன் பிரஜை ஒருவருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் ரூ. 26,500 அபராதம விதித்துள்ளது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டத்தரணி, இந்த சம்பவத்தின் போது அவர் குடிபோதையில் இருந்ததாகவும் குற்றம் செய்யும் எண்ணம் அவருக்கு இல்லை என்றும், அவர் சம்பவத்துக்கு வருந்துவதாகவும் குற்றத்தை ஒப்புக்கொள்வதாகவும் தெரிவித்தார்.
முன்னதாக, விமான நிலைய பொலிஸார், குறித்த நபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.