பொகவந்தலாவை நகரில் போராட்டம்

பொகவந்தலாவை பிரதான பஸ் தரிப்பிடத்தில் ஆரம்பமான ஆர்ப்பாட்ட பேரணி, பொகவந்தலாவ செல்வகந்தை சந்திவரை சென்றது.

ஜுலை 16, 2024 - 13:02
பொகவந்தலாவை நகரில் போராட்டம்

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபாய் வழங்குமாறு வலியுறுத்தி, பொகவந்தலாவை நகரில் நேற்று (15) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பொகவந்தலாவை பிரதான பஸ் தரிப்பிடத்தில் ஆரம்பமான ஆர்ப்பாட்ட பேரணி, பொகவந்தலாவ செல்வகந்தை சந்திவரை சென்றது.

இதன்போது பெருந்தோட்ட துரைமார் சம்மேளனத்தின் ஊடக பேச்சாளர் ரொஷான் ராஜதுரையின் உருவப்படம் எரிக்கப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டத்தால் பொகவந்தலாவ ஹட்டன் வீதி ஊடான போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. சுமார் மூன்று மணிநேரம் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதோடு,பொகவந்தலாவ நகர வர்த்தகர்களும் வர்த்தக நிலையங்களை மூடி ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு வழங்கினர்.

(க.கிஷாந்தன்)

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!