கத்திக்குத்துக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு
இந்த சம்பவத்தில் மேலும் ஐந்து பேர் காயமடைந்தனர்.

ஜேர்மனியின் Mannheim பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை கத்தியால் தாக்கப்பட்ட பொலிஸ் அதிகாரி உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
25 வயதுடைய சந்தேக நபரை கட்டுப்படுத்த முற்பட்ட 29 வயதான பொலிஸ் உத்தியோகத்தர் கத்தியால் குத்தப்பட்டார்.
இந்த சம்பவத்தில் மேலும் ஐந்து பேர் காயமடைந்தனர்.