சேலையில் கட்டப்பட்ட தொட்டிலில் கழுத்து இறுகி சிறுவன் மரணம்!
குறித்த சிறுவன், தனது உறவினர்களுடன் வேட்டையாடச் சென்ற போது அவர்கள் வைத்திருந்த கட்டுத்துப்பாக்கியால் சுடப்பட்டதில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வீட்டிலிருந்த சிறு குழந்தைக்காகச் சேலையில் கட்டப்பட்டிருந்த தொட்டிலில் விளையாடிக் கொண்டிருந்த போது கழுத்து இறுகி 9 வயதுச் சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இந்தத் துயரச் சம்பவம் நாவலப்பிட்டி, மொன்றிகிறிஸ்ரோ தோட்டத்தில் நேற்றுப் பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் நாவலப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, வாகரே பிரதேசம் - கட்டமுரி வனப்பகுதியில் கட்டுத்துப்பாக்கி வெடித்த மற்றுமொரு சம்பவத்தில் 14 வயதுச் சிறுவன் உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுவன், தனது உறவினர்களுடன் வேட்டையாடச் சென்ற போது அவர்கள் வைத்திருந்த கட்டுத்துப்பாக்கியால் சுடப்பட்டதில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் உயிரிழந்த சிறுவனுடன் வேட்டையாடச் சென்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.