வாகன இறக்குமதி தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்
சிநேகபூர்வ சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அடுத்த வருடம் முதல் படிப்படியாக வாகனங்களை இறக்குமதி செய்ய எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய இளைஞர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த “இளைஞர்களே எங்களின் எதிர்காலம்” என்ற சிநேகபூர்வ சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதன்போது, வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான திட்டங்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், அடுத்த ஆண்டு முதல் படிப்படியாக இந்த செயல்முறையை தொடங்க அரசாங்கம் இலக்கு வைத்துள்ளதாக கூறியுள்ளார்.
“இலங்கையின் தற்போதைய கொடுப்பனவு நிலுவை நிலைமை சாதகமாக இல்லை. பெரும்பாலான இறக்குமதிகள் அனுமதிக்கப்பட்டாலும், வாகன இறக்குமதியில் கட்டுப்பாடுகள் தொடர்கின்றன. இருப்பினும், அடுத்த ஆண்டு முதல் அத்தியாவசிய வாகன இறக்குமதியை படிப்படியாக அனுமதிக்க உத்தேசித்துள்ளோம்.
இந்த இலக்கை நோக்கிய ஒரு படியாக இந்த ஆண்டு, சுற்றுலாப் போக்குவரத்துக்கான பேருந்துகளை இறக்குமதி செய்ய அனுமதித்துள்ளோம்” ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.