நுகேகொட பேரணிக்கு பயந்துவிட்டார்கள்; அவதூறுகளுக்கு 21 இல் பதில் கிடைக்கும் : நாமல் 

இவ்வாறான அவதூறுகளுக்குரிய பதில்களை 21ஆம் திகதி நுகேகொட பேரணியில் நாடு முழுவதும் காண முடியும். 

நவம்பர் 19, 2025 - 15:56
நுகேகொட பேரணிக்கு பயந்துவிட்டார்கள்; அவதூறுகளுக்கு 21 இல் பதில் கிடைக்கும்  : நாமல் 

தனது பட்டப்படிப்பு குறித்த அவதூறுகள் மற்றும் பழிகள் அனைத்துக்கும் 21ஆம் திகதி பதில் கிடைக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். 

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே, அவர் இவ்வாறு கூறினார். 

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த சில வாரங்களிலேயே நீதிமன்றத்தில் 'பி அறிக்கை' ஒன்றைத் தாக்கல் செய்து, எனது பட்டப்படிப்பு குறித்து விசாரிக்க அனுமதி பெற்றது. 

“அதன் பிறகு மாதக்கணக்கில் இது குறித்து விசாரணைகள் நடந்து வருகின்றன. இன்று வரை நீதிமன்றத்தில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் இணையத்தளங்கள் மூலம் அவதூறு பரப்பப்படுகிறது.

“இவ்வாறான அவதூறுகளுக்குரிய பதில்களை 21ஆம் திகதி நுகேகொட பேரணியில் நாடு முழுவதும் காண முடியும். 

“நுகேகொட பேரணிக்குக் கடுமையாகப் பயந்துவிட்டார்கள். அதனால் பொய்களைப் பரப்புகிறார்கள்” என நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். 

மேலும், தனது பட்டப்படிப்பு தொடர்பாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என்றும் அவர் மறுத்தார். 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!