இலங்கை பாராளுமன்ற வளாகத்திற்குள் பாம்புகள் : சபாநாயகர் அலுவலகத்துக்குள் புகுந்தது
சமீப காலங்களில் நாடாளுமன்ற வளாகத்திலிருந்து கிட்டத்தட்ட 20 பாம்புகள் மற்றும் பிற ஊர்வன இனங்கள் பாதுகாப்பாக அகற்றப்பட்டுள்ளதாக தோட்ட பராமரிப்பு பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை பாராளுமன்ற வளாகத்திற்குள் சில காலமாக பல்வேறு பாம்புகள் நுழைந்து வருகின்றன. இவை தியவன்னா ஓயா பகுதியிலிருந்து வருகின்றன.
சமீப காலங்களில் நாடாளுமன்ற வளாகத்திலிருந்து கிட்டத்தட்ட 20 பாம்புகள் மற்றும் பிற ஊர்வன இனங்கள் பாதுகாப்பாக அகற்றப்பட்டுள்ளதாக தோட்ட பராமரிப்பு பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இநிலையில், சபாநாயகர் டொக்டர் ஜகத் விக்ரமரத்னவின் பாராளுமன்ற அலுவலகத்தில் பாம்பு ஒன்று காணப்பட்டதால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.
சபாநாயகர் வழக்கமாக உணவு உட்கொள்ளும் பகுதிக்கு அருகிலுள்ள ஜன்னல் வழியாக பாம்பு நேற்று செவ்வாய்க்கிழமை (18) காலை நுழைய முயன்றபோது, ஊழியர்கள் முதலில் பாம்பைக் கவனித்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாராளுமன்றத்தின் தோட்ட பராமரிப்பு அதிகாரி உடனடியாக செயல்பட்டு, பாம்பை அந்த இடத்திலிருந்து அகற்றியதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.