வடக்கு காணிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதிக்கு தபால் அட்டை

வடக்கில் உள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி ஜனாதிபதிக்கு தபால் அட்டைகள் அனுப்பும் போராட்டம் பலாலி, மாவிட்டபுரத்தில் நேற்று (21) ஆரம்பமானது.

Mar 22, 2024 - 09:00
Mar 22, 2024 - 09:04
வடக்கு காணிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதிக்கு தபால் அட்டை

யுத்தத்தின் போது இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வடக்கில் உள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி ஜனாதிபதிக்கு தபால் அட்டைகள் அனுப்பும் போராட்டம் பலாலி, மாவெட்டுபுரத்தில் நேற்று (21) ஆரம்பமானது.

"எங்கள் நிலத்தை எம்மிடம் மீள ஒப்படையுங்கள்" என்ற கோரிக்கை இந்த அஞ்சல் அட்டைகளில் எழுதப்பட்டுள்ளது.

மன்னார் சமூக பொருளாதார அபிவிருத்திக்கான நிறுவனம் இந்த அஞ்சல் அட்டை அனுப்பும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்வில் நிலங்களை இழந்த குடும்பங்களைச் சேர்ந்த அதிகளவானவர்கள் கலந்துகொண்டனர்.

இந்த தபால் அட்டைகள் அனுப்பும் போராட்டமானது, வடக்கின் அனைத்து மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில் இடம்பெறவுள்ளதாக மன்னார் சமூக பொருளாதார அபிவிருத்திக்கான நிறுவனம் தெரிவித்தது.  (News21)

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02


NEWS21
நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...
Editorial Staff நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.