பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான திகதியில் இதுவரை மாற்றம் இல்லை
திகதியை மாற்றுவது தொடர்பில் இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
முன்னர் அறிவிக்கப்பட்ட படி, டிசெம்பர் 16ஆம் திகதியே பாடசாலைகளை மீள ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்தார்.
இந்தத் திகதியை மாற்றுவது தொடர்பில் இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து இன்றும் (02) ஒரு கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மாகாண மட்டத்திலான பாடசாலைகளையாவது ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்விச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.