கனடாவில் இருந்து நாடு கடத்தப்படுவோரின் எண்ணிக்கை உயர்வு - வெளியான தகவல்!
நாடு கடத்தப்படுவோரின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளதாக அந்நாட்டு எல்லைப் பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கனடாவில் இருந்து அதிகளவான வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்படுவதாக செய்தி வெளியாகியுள்ளது. கடந்த சில வருடங்களாகவே அங்கு நாடு கடத்தப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில், நாடு கடத்தப்படுவோரின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளதாக அந்நாட்டு எல்லைப் பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கனடாவுக்கு போலி கடவுச்சீட்டுடன் செல்ல முயன்ற யாழ். இளைஞன் கைது
இந்த வருடத்தின் முதல் ஆறு மாத காலப்பகுதியில் மாத்திரம் கனடாவில் இருந்து 7032 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன்படி, முன்னைய ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது நாடு கடத்தப்படுவோரின் எண்ணிக்கை வெகுவாக உயர்வடைந்துள்ளதுடன், நாள் ஒன்றுக்கு சராசரியாக நாற்பது பேர் வரையில் கடாவிலிருந்து நாடு கடத்தப்படுகின்றனர்.
எவ்வாறாயினும், கனடாவில் இருந்து நாடு கடத்தல்கள் அதிகரிக்கப்பட்டமைக்கு அகதி ஆதரவு அமைப்புக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கனடா செல்லும் மாணவர்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்!