கனடாவுக்கு போலி கடவுச்சீட்டுடன் செல்ல முயன்ற யாழ். இளைஞன் கைது
தொடர்ந்து, விசாரணையின் போது, அவரது இலங்கை கடவுச்சீட்டு மற்றும் மாலைதீவுக்கான போலியான விமான பயணச்சீட்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பின்னர் விசாரணைகளின் போது, விமான நிலையத்திற்கு அருகாமையில் போலி கடவுச்சீட்டு தயாரிக்கும் ஒருவருக்கு 40 லட்சம் ரூபாய் செலுத்தி போலியான கனடா கடவுச்சீட்டை பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இளைஞன் பருத்திதுறையை சேர்ந்த 24 வயதுடையவர் எனவும் விசாரணைகளின் பின்னர் குறித்த நபர் விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படுவார் என்றும் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.