கடலில் கவிழ்ந்த சிறிய படகு: சட்டவிரோத நுழைவு முயற்சியின் போது 4 பேர் பலி
விபத்துக்குள்ளானது “பங்கா” எனப்படும் சிறிய ரக படகாகும். இது பொதுவாக ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் நுழைய முயலும் குடியேறிகளால் பயன்படுத்தப்படும் வகையானது.
அமெரிக்காவின் சான் டியாகோ அருகே நடந்த படகு விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இம்பீரியல் கடற்கரை பகுதியில் சிறிய ரக படகு ஒன்று கடலில் கவிழ்ந்து, 4 பேர் உயிரிழந்த துயரச்சம்பவம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 11 மணியளவில் சீகோஸ்ட் டிரைவ் அருகே இந்த விபத்து ஏற்பட்டது. சம்பவத்திற்குப் பிறகு 5 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்குள்ளானது “பங்கா” எனப்படும் சிறிய ரக படகாகும். இது பொதுவாக ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் நுழைய முயலும் குடியேறிகளால் பயன்படுத்தப்படும் வகையானது என்பதால், இந்த விபத்தும் சட்டவிரோத நுழைவு முயற்சியின் ஒரு பகுதியாக இருக்கலாம் என ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்திற்கான துல்லியமான காரணம் குறித்து அமெரிக்க கடலோர காவல்படை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.