பிரித்தானியாவில் வசிப்போரில் ஐந்தில் ஒருவர் வெளிநாட்டில் பிறந்தவர்கள் – புதிய ஆய்வு; அதிர்ச்சி தகவல்
பிரித்தானியாவில் தற்போது வாழும் மக்களில் சுமார் ஒவ்வொரு ஐந்து பேரில் ஒருவரும் வெளிநாடுகளில் பிறந்தவர்கள் என புதிய ஆய்வொன்று வெளிப்படுத்தியுள்ளது. இந்த வளர்ச்சி, நாட்டின் மக்கள் தொகை மாற்றம் வேகமாக நடைபெறுகிறது என்பதை காட்டுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

புதிய தரவுகளின்படி, பிரித்தானியாவின் மொத்த சனத்தொகையில் 19.6% பேர் வெளிநாட்டில் பிறந்தவர்கள். இது 2021ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் பதிவான 16%-த்தை விட கணிசமான உயர்வாகும்.
2021 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில், பிரித்தானியர் அல்லாத குடிமக்களின் நிகர வருகை 2.9 மில்லியன் ஆக இருந்தது என்று திருத்தப்பட்ட புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இதே நேரத்தில், பிரித்தானிய குடிமக்கள் நாட்டை விட்டு வெளியேறுவது அதிகரித்திருக்கிறது என்பதும் மாற்றத்திற்கான மற்றொரு முக்கிய காரணமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் தகவல்கள் வெளியாகியதைத் தொடர்ந்து, நாட்டின் மக்கள் தொகை அமைப்பில் ஏற்பட்டிருக்கும் விரைவான மாற்றங்களை உணர்ந்து கொள்ள அவசர சனத்தொகைக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஆய்வு குழுக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.