8 மாத கர்ப்பிணியும் சிசுவும் மரணம்... உயிர்பிழைத்த மற்றுமொரு சிசு
மூதூர் பகுதியை சேர்ந்த 33வயதுடைய பெண் இரட்டை குழந்தைகளை பிரசவிக்க தயாராக இருந்துள்ளார்.

இரட்டை குழந்தைகளை பிரசவிக்க தயாராக இருந்த எட்டுமாத கர்பிணி தாய் மற்றும் சிசு ஒன்றும் உயிரிழந்துள்ள சம்பவம் திருகோணமலை வைத்தியசாலையில் வௌ்ளிக்கிழமை (16) இடம்பெற்றுள்ளது.
மூதூர் பகுதியை சேர்ந்த 33வயதுடைய பெண் இரட்டை குழந்தைகளை பிரசவிக்க தயாராக இருந்துள்ளார்.
இந்த நிலையில், மாதாந்த மகப்பேற்று பரிசோதனைக்காக திருகோணமலை தனியார் வைத்தியசாலை ஒன்றில் ஸ்கேன் பரிசோதனையை மேற்கொண்டபோது இரண்டு சிசுக்களில் ஒன்று உயிரிழந்துள்ளதாக வைத்தியர் தெரிவித்துள்ளனர்.
அந்த வைத்தியரின் பணிப்புரைக்கு அமைவாக குறித்த தாய் வைத்தியசாலைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டபோதிலும் உயர் குருதி அழுத்தம் காரணமாக வழியிலேயே மயக்கம் அடைந்துள்ளார்.
பின்னர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சத்திர சிகிச்சை மேற்கொண்டபோதிலும் குறித்த தாயும் உயிரிழந்தார்.
எனினும், மற்றுமொரு சிசுசை மட்டும் காப்பாறிய வைத்தியர்கள் விசேட சிசு பராமரிப்புப்பிரிவில் வைத்துள்ளனர்.
தாய் மற்றும் சிசுவின் சடலங்கள் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
குறித்த மரணங்கள் தொடர்பில் மூதூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.