உலகின் 60 சதவீதமான வேலை வாய்ப்புகள் ஆபத்தில்
வாஷிங்டனில் நடைபெற்ற நிகழ்வில் அதன் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா இதனை தெரிவித்தார்.

உலகில் 60 சதவீதமான வேலைகள் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதால் பாதிக்கப்படும் என, சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
வாஷிங்டனில் நடைபெற்ற நிகழ்வில் அதன் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா இதனை தெரிவித்தார்.
இருப்பினும், வளரும் நாடுகளில் இந்த பாதிப்பு 40 சதவீதம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அதிகமான மக்களுக்கு நன்மைகளை உருவாக்க உதவும் என்று அவர் கூறியுள்ளார்.