வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 6 பேர் ஹோட்டலில்  மர்ம மரணம்

தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் உள்ள பிரபல  ஹோட்டலில்  தங்கியிருந்த வெளிநாட்டு  சுற்றுலா பயணிகள் 6 பேர் நேற்று மர்ம மரணம் அடைந்துள்ளனர்.

ஜுலை 17, 2024 - 16:19
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 6 பேர் ஹோட்டலில்  மர்ம மரணம்

தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் உள்ள பிரபல  ஹோட்டலில்  தங்கியிருந்த வெளிநாட்டு  சுற்றுலா பயணிகள் 6 பேர் நேற்று மர்ம மரணம் அடைந்துள்ளனர்.

இதில், அவர்களின் உடல்கள் ஹோட்டலின் ஒரே அறையில் கிடந்துள்ளமை பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

அவர்களில் 2 பேரிடம் அமெரிக்க கடவுச்சீட்டு இருந்துள்ளது. அவர்களில் 3 பேர் பெண்கள். மற்ற 3 பேர் ஆண்கள் ஆவர். 

அவர்களின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை. அவர்களுக்கு வழங்கிய உணவு அப்படியே இருந்தது. அவர்கள் அனைவருக்கும் 37 முதல் 56 வயதுக்குள் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த மர்ம மரண சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை ஹோட்டலின் பணிப்பெண் முதலில் பார்த்து பொலிஸாருக்கு தகவல் தெரிவித்து உள்ளார்.

சம்பவம் நடந்த ஹோட்டலுக்கு அந்நாட்டு பிரதமர் ஸ்ரத்தா தவிசின் நேரில் சென்று பார்வையிட்டார்.

இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க அவர் உத்தரவிட்டார். 

சுற்றுலாவுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், விரைவாக நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து விசாரணை அமைப்புகளுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!