நட்சத்திர விடுதியில் போதை விருந்து -  49 பேர் கைது

சிங்கப்பூரின் சுற்றுலா தலங்களின் ஒன்றான சென்டோசா தீவில் போதைப்பொருள் நடமாட்டம் இருப்பதாக அதிகாரிகளுக்கு துப்பு கிடைத்தது. 

ஆகஸ்ட் 13, 2023 - 12:35
நட்சத்திர விடுதியில் போதை விருந்து -  49 பேர் கைது

சிங்கப்பூரின் சுற்றுலா தலங்களின் ஒன்றான சென்டோசா தீவில் போதைப்பொருள் நடமாட்டம் இருப்பதாக அதிகாரிகளுக்கு துப்பு கிடைத்தது. 

அதன்பேரில் அங்குள்ள ஒரு நட்சத்திர விடுதியில் போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் அதிரடியாக நுழைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது போதை பவுடர் பயன்படுத்திய 49 பேரை கைது செய்தனர். பின்னர் சிஎன்பி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். 

கைப்பற்றப்பட்ட பொருட்களில் எக்ஸ்டசி, கெட்டமைன் மற்றும் போதைப்பொருள் சாதனங்கள் ஆகியவை இருந்தன. 

கைது செய்யப்பட்ட 49 பேரும் 21 முதல் 46 வயதுடையவர்கள். அவர்களில் முப்பத்தைந்து பேர் சிங்கப்பூர்காரர்கள் என்று தெரியவந்துள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!