ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்காக 35 இலட்சம் பேர்
மாத்தறை மாவட்டத்தில் 328,159 பேர் வாக்களிக்கவில்லை என்பதுடன், குருநாகல் மாவட்டத்தில் 267,596 பேர் வாக்களிக்கவில்லை.

ஜனாதிபதித் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் கிட்டத்தட்ட நான்கு இலட்சம் பேர் வாக்களிக்கவில்லை என தெரியவந்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தரவுகளின்படி அந்த மாவட்டத்தில் 399,165 பேர் வாக்களிக்கவில்லை.
அத்துடன், கம்பஹா மாவட்டத்தில் வாக்களிக்காதவர்களின் எண்ணிக்கை 393,359 ஆகும்.
மாத்தறை மாவட்டத்தில் 328,159 பேர் வாக்களிக்கவில்லை என்பதுடன், குருநாகல் மாவட்டத்தில் 267,596 பேர் வாக்களிக்கவில்லை.
இந்த ஜனாதிபதி தேர்தலில் மொத்தம் 3,520,438 பேர் வாக்களிக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 2019 ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்காத வாக்காளர்களின் எண்ணிக்கை 2,604,145 ஆகும்.