அதிகாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் பலி
கொஸ்கொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொஸ்கொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (31) அதிகாலை 5.15 மணியளவில் கொஸ்கொட, துவாமோதர பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு T-56 துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக பொலிஸாரால் நடத்தப்பட்ட ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கொஸ்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.