2,087 குடும்பங்கள் பாதிப்பு; இன்றும் பலத்த மழை பெய்யும்!
சீரற்ற வானிலை காரணமாக தென் மாகாணத்தில் 2 ஆயிரத்து 87 குடும்பங்களைச் சேர்ந்த 8 ஆயிரத்து 87 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அதேநேரம் மேற்கு, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும் என அந்தத் திணைக்களம் அறிக்கை வௌியிட்டுள்ளது.
மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 75 மில்லி மீற்றர் பலத்த மழை பெய்யக்கூடும் என்பதுடன், சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவும் எனவும் எதிர்வு கூறியுள்ளது.
2,087 குடும்பங்கள் பாதிப்பு
சீரற்ற வானிலை காரணமாக தென் மாகாணத்தில் 2 ஆயிரத்து 87 குடும்பங்களைச் சேர்ந்த 8 ஆயிரத்து 87 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், ஊவா மாகாணத்தில் 310 குடும்பங்களைச் சேர்ந்த 1,183 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இடியுடன் கூடிய மழையுடன் பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களிடம் கோரியுள்ளது.
வெள்ள அபாயம்
நில்வலா கங்கையின் மேல் மற்றும் மத்திய பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் அங்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.