உயர்தர பரீட்சை பெறுபேறு வெளியானது; மீள் திருத்த விண்ணப்பங்கள் குறித்த அறிவிப்பு

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தர பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ளன.

மே 31, 2024 - 21:58
உயர்தர பரீட்சை பெறுபேறு வெளியானது; மீள் திருத்த விண்ணப்பங்கள் குறித்த அறிவிப்பு

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தர பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ளன.

பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும்.

உயர்தரப் பரீட்சை ஜனவரி 4ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடைபெற்றது.

இந்த ஆண்டு பரீட்சைக்கு 269,613 பரீட்சார்த்திகள் தோற்றியதுடன், அவர்களில் 229,057 பேர் பாடசாலை விண்ணப்பதாரர்கள்.

தனியார் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை 40,556 என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

173,444 பரீட்சார்த்திகள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளதாகவும் 190 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும் பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

பாடசாலை பரீட்சாரத்திகளின் பெறுபேறுகள் அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என, பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மீள் திருத்த முடிவுகளுக்காக http://onlineexams.gov.lk/eic என்ற இணையத்தளத்திற்குச் சென்று விண்ணப்பங்களை ஜூன் 5 முதல் 19.06.2024 வரை சமர்ப்பிக்கலாம்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!