2 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவிய சீனா

செயற்கைக்கோள்கள் விண்வெளி சூழல் கண்காணிப்பு போன்ற புதிய தொழில்நுட்பங்களை சுற்றுப்பாதையில் சரிபார்ப்பதற்காக பயன்படுத்தப்பட உள்ளது.

Dec 13, 2022 - 11:30
2 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவிய சீனா

வடமேற்கு சீனாவில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்திலிருந்து லாங் மார்ச்-4சி ராக்கெட் மூலம் ஷியான்-20ஏ மற்றும் ஷியான்-20பி என்ற இரண்டு செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டன.

செயற்கைக்கோள்கள் விண்வெளி சூழல் கண்காணிப்பு போன்ற புதிய தொழில்நுட்பங்களை சுற்றுப்பாதையில் சரிபார்ப்பதற்காக பயன்படுத்தப்பட உள்ளது.

செயற்கைக்கோள்கள் அதன் சுற்றுப்பாதையில் நுழைந்ததாகவும், இது லாங் மார்ச் சீரிஸ் ராக்கெட்டுகளின் 454-வது திட்டம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிற சமூக ஊடக தளங்களில் எங்களுடன் இணைந்திருங்கள்