காஸாவிலிருந்து எகிப்துக்கு செல்ல 17 இலங்கையர்களுக்கு அனுமதி
இதற்கான அனுமதியை காஸா எல்லை ஊடாக வெளியேற்றம் தொடர்பான அதிகாரசபை வழங்கியுள்ளது.

காஸாவிலிருந்து வெளியேறி எகிப்துக்கு செல்ல 17 இலங்கையர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான அனுமதியை காஸா எல்லை ஊடாக வெளியேற்றம் தொடர்பான அதிகாரசபை வழங்கியுள்ளது.
இதேவேளை, இன்று எகிப்துக்கு செல்வதற்கு 15 நாடுகளை சேர்ந்த 596 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன் பிரகாரம் இன்றைய தினம் ராஃபா எல்லை ஊடாக 17 இலங்கையர்கள் எகிப்துக்கு வெளியேறவுள்ளனர்.
பட்டியலில் உள்ள 596 வெளிநாட்டு மற்றும் இரட்டை குடிமக்கள் பின்வரும் நாடுகளைச் சேர்ந்தவர்கள்:
அஜர்பைஜான்: 8
பெல்ஜியம்: 50
பஹ்ரைன்: 6
சாட்: 2
குரோஷியா: 23
கிரீஸ்: 24
ஹங்கேரி: 20
இத்தாலி: 4
வடக்கு மாசிடோனியா: 4
மெக்சிகோ: 2
நெதர்லாந்து: 20
தென் கொரியா: 5
இலங்கை: 17
சுவிட்சர்லாந்து: 11
அமெரிக்கா: 400