புனித மிக்கேல் கல்லூரியின் 150வது ஆண்டு நிறைவில் கிரிக்கெட் போட்டி

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 150ஆவது வருட நிறைவை முன்னிட்டு, தபால் திணைக்களத்தினால் தபால் முத்திரை வெளியிடப்படவுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

ஜுலை 26, 2023 - 13:57
புனித மிக்கேல் கல்லூரியின் 150வது ஆண்டு நிறைவில் கிரிக்கெட் போட்டி

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 150ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

அந்த வகையில், முதல் கட்டமாக மட்டக்களப்பில் உள்ள பிரதான பாடசாலைகளின் பழைய மாணவர்களுக்கு இடையிலான கடினப் பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி, எதிர்வரும் 29ஆம் மற்றும் 30ஆம் திகதிகளில் சிவானந்தா மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இச் சுற்றுப்போட்டியில் சிவானந்தா தேசிய பாடசாலை, மெதடிஸ்த மத்திய கல்லூரி, இந்துக்க ல்லூரி மற்றும் புனித மிக்கேல் கல்லூரி ஆகிய பாடசாலைகளின் பழைய மாணவர்கள் போட்டியிடவுள்ளனர்.

பாடசாலைகளுக்கு இடையிலான நல்லுறவை ஏற்படுத்துவதற்காக இப்போட்டிகள் ஒழுங்குபடுத்தப்பட்டுத்தப்பட்டுள்ளதுடன், மாவட்டத்தில் முதல் தடவையாக பழைய மாணவர்களிடையிலான கடினப் பந்து கிரிக்கட் போட்டி  இடம்பெறுவது இதுவே முதற் தடவையாகும்.

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 150ஆவது வருட நிறைவை முன்னிட்டு, தபால் திணைக்களத்தினால் தபால் முத்திரை வெளியிடப்படவுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

புனித மிக்கேல் கல்லூரியின் 150ஆவது வருட நிறைவை முன்னிட்டு பழைய மாணவர் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி திட்டங்கள் குறித்த கலந்துரையாடல், பழைய மாணவர் சங்கத்தின் 150ஆவது வருட ஒழுங்கமைப்பு குழு தலைவர்  சிரேஷ்ட சட்டத்தரணி பேரின்பம் பிரேம்நாத் தலைமையில், புனித மிக்கேல் பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது. 

இதில் பழைய மாணவர் சங்க உதவி போசகர் அருட்தந்தை போல் சற்குணநாயகம், பழைய மாணவர் சங்க உப தலைவர் யேசு சபை துறவி அருட்தந்தை ரொசான், மற்றும் இச் சுற்றுப் போட்டியில் கலந்துகொள்ளும் முன்று பாடசாலைகளின் பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள் மற்றும் பழைய மாணவர்கள் கலந்துகொண்டனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!