சீனாவின் தொடக்கப்பள்ளி விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 மாணவர்கள் பலி
இறந்தவர்கள் அனைவரும் மூன்றாம் வகுப்பு மாணவர்கள் என்று ஒரு ஆசிரியர் ஹெபெய் மாகாணத்தின் அரச ஆதரவு ஊடகமான Zonglan news இடம் கூறினார்.

சீனாவின் மத்திய ஹெனான் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 மாணவர்கள் தீயில் சிக்கி உயிரிழந்ததாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
இறந்தவர்கள் அனைவரும் மூன்றாம் வகுப்பு மாணவர்கள் என்று ஒரு ஆசிரியர் ஹெபெய் மாகாணத்தின் அரச ஆதரவு ஊடகமான Zonglan news இடம் கூறினார்.
சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்ட ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக, சீனாவின் சிசிடிவி தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
மத்திய ஹெனானில் உள்ள கிராமப்புற ஃபாங்செங் மாவட்டத்தில் உள்ள யிங்காய் பள்ளியில் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கிய தீ, நள்ளிரவுக்கு முன்பு அணைக்கப்பட்டது, மேலும் பள்ளியின் உரிமையாளர் தடுத்து வைக்கப்பட்டார் என்று சிசிடிவி தெரிவித்துள்ளது.
தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.