தடுப்பூசி ஒவ்வாமை; 11 சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!
தடுப்பூசியை தொடர்ந்து திடீர் ஒவ்வாமை எதிர்விளைவுகளுக்கு உள்ளாகிய சிறுவர்கள் பின்னர் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு உடனடியாக மாற்றப்பட்டனர்.

மிஹிந்தலை பிரதேச சிறுவர்கள் சிலருக்கு வழங்கப்பட்ட தடுப்பூசியினால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக 11 சிறுவர்கள், அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
6 வயதுக்கும் 13 வயதுக்கும் இடைப்பட்ட குறித்த சிறுவர்கள், சளி தொடர்பான நோய்களுக்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், மிஹிந்தலை வைத்தியசாலையில் அவர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.
தடுப்பூசியை தொடர்ந்து திடீர் ஒவ்வாமை எதிர்விளைவுகளுக்கு உள்ளாகிய சிறுவர்கள், பின்னர் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு உடனடியாக மாற்றப்பட்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் வடமத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.